நாட்டில் ஏற்பட்டுள்ள இரசாயன உரத்தட்டுப்பாடு , கிருமி நாசினி தட்டுப்பாடு போன்ற காரணங்களினால் அதிக பிரதேசங்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்தினை கைவிட்டு ஏனைய தொழில்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், இயற்கையின் சீற்றமும் விவசாயிகளை விட்டு வைக்கவில்லை. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையால் விவசாயிகள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் கடந்த சிலநாட்களாக பெய்துவரும் அடை மழையினால் விவசாய நிலங்களில் வெள்ளம் நிரம்பியுள்ளதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகியுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உரம் ,கிருமிநாசினிகளை அதிக விலைக்கு வாங்கி விவசாயத்தை கை விடாமல் பாதுகாத்து வந்து நுவரெலியா , பொரலாந்த , கந்தபளை போன்ற பகுதிகளில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் தங்களது பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக அப்பிரதேச விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் உள்ள விவசாய நிலங்களில் வெள்ள நீர் நிரம்பியதால் பல ஏக்கர் விவசாய காணிகளில் உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் மரக்கறி உற்பத்திகள் பாரிய சேதமடைந்துள்ளன.
அதேவேளை தாழ்ந்த பிரதேசங்களிலுள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா இராகலை பிரதான வீதியில் கல்பாலம் கோட்லோஜ் சந்தியில் வெள்ளநீர் நிரம்பியதால் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM