பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஷார்ஜா விளையாட்டரங்கில் இன்று (29) நடைபெற்ற குழு 1 க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பாக ரொஸ்டன் சேஸி 39 ஓட்டங்களையும் நிக்கொலஸ் பூரான் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிந்தி ஹசன், முஸ்தபிஷுர் ரஹ்மான் மற்றும் சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்நிலையில், 20 ஓவர்களில் 143 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 3 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் லிட்டன் தாஸ் 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் ரவி ராம்போல், ஜேசன் கோல்டர், அந்ரே ரசல்,அகவில் கொசைன் மற்றம் டுவைன் பிராவோ ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
3 ஓட்டங்களால் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.
இப் போட்டியின் ஆட்டநாயகனாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் நிக்கொலஸ் பூரன் தெரிவுசெய்யப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM