ரஜினிகாந்த் வைத்தியசாலையில் அனுமதி

By Gayathri

29 Oct, 2021 | 08:35 PM
image

திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

திரைத்துறையில் சேவையாற்றியதற்காக இந்திய அரசால் வழங்கப்படும் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை அண்மையில் பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்திற்கு, நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. 

இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இது குறித்த செய்தி வெளியான போது அவரது மனைவி லதா ரஜினிகாந்த், '' ழக்கமான மருத்துவ பரிசோதனை தான்'' என விளக்கமளித்தார்.

இந்நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்தை நரம்பியல் மற்றும் இதய சிகிச்சை நிபுணர்கள் பரிசோதனை செய்தனர். 

அதன்போது அவருக்கு இரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தனர். இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ரஜினிகாந்த்திற்கு ஏற்பட்டுள்ள இரத்த நாள பாதிப்பை சீராக்கும் சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

இதனிடையே நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்திருப்பதால், ஏனைய உறுப்புகளின் செயற்பாடுகள் குறித்தும் வைத்தியர்கள் தீவிரமாக அவதானித்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right