கொவிட் தொற்றானது மீண்டும் அதிகரிக்கும் - விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி எச்சரிக்கை

Published By: Gayathri

29 Oct, 2021 | 08:23 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மைய நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், சுகாதார தரப்பிற்கு கிடைக்கப் பெறும் தகவல்களுக்கமைய மேலும் சில மாதங்களில் கொவிட் தொற்றானது மீண்டும் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

எனவே இந்த நிலைமையை புரிந்துகொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்தார்.

கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் முறைமை மற்றும் தற்போதைய கொவிட் நிலைவரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் தொற்றாளர்களுக்கு வீடுகளிலேயே சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டம் கடந்த 5 மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனூடாக குறித்த 5 மாதங்களுக்குள் ஒரு இலட்சத்து 1152 கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 95,436 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். வீடுகளிலேயே சிகிச்சையளிப்பதற்கு தெரிவுசெய்யப்பட்ட தொற்றாளர்களில் சுமார் 1.5 சதவீதமானோரே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். 

தற்போது 3,701 தொற்றாளர்கள் இதே முறைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரம்பத்தில் காணப்பட்ட தொற்றாளர்களை விட தற்போது சடுதியான வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கு கொவிட் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டாலும், தென்படாவிட்டாலும் எம்மால் முன்னெடுக்கப்படுகின்ற வீடுகளிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும். 

1390 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து தம்மை பதிவு செய்துகொள்ள முடியும்.

அண்மைய நாட்களாக கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்கக் கூடியதாக இருந்தாலும், சுகாதார தரப்பிற்கு கிடைக்கப் பெறும் தகவல்களுக்கமைய மேலும் சில மாதங்களில் கொவிட் தொற்றானது மீண்டும் அதிகரிக்கும் என்பது தெரியவந்துள்ளது. 

எனவே இந்த நிலைமையை புரிந்துக்கொண்டு அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51