பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்

Published By: Digital Desk 2

29 Oct, 2021 | 04:48 PM
image

நடிகர் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பின் காரணமாக திடீரென்று இன்று உயிரிழந்தார்.

கன்னட திரை உலகின் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் புனித் 46 வயதான இவர், பெங்களூருவில் வசித்து வந்தார். அவர் இன்று காலை தனது இல்லத்தில் வழக்கம்போல் உடற்பயிற்சியில் ஈடுபட்டார். 

அதன் போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மயங்கி சரிந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

1976 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர். சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான மாநில விருது மற்றும் தேசிய விருதை வென்ற இவர், 2002 ஆம் ஆண்டில் ‘அப்பு ’ என்ற படத்தின் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். 

முப்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த இவரது நடிப்பில் தயாரான ‘யுவரத்னா’ என்ற படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. தற்போது கூட இரண்டு படங்களில் நடித்து வரும் அவருக்கு, திடீரென்று ஏற்பட்ட உயிரிழப்பு, அவரது ரசிகர்களையும், கன்னட திரையுலகினரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 

நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள ஏராளமான திரையுலக பிரபலங்கள் அவரின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பெங்களூருவில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் வைத்தியசாலையில் ஏராளமான ரசிகர்கள் திரண்டிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30