பரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ கோப்ரலாக இருந்த தினேஷ் பிரியந்தவுக்கு இராணுவ சார்ஜனாக தர உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கை இராணுவத்தால் இவருக்கு 1.5 மில்லியன் பெறுமதியான வீடொன்றும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.