இலங்கையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இல்லாது இயங்கிய ஒரே ஒரு வைத்தியசாலையாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை இதுவரை காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் முகமாக பல்வேறு கொடையாளர்களின் 40 மில்லியன் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடத்தை இலங்கை உணர்அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம திறந்து வைத்தார்.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் க.வாசுதேவா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் இலங்கை உணர்அழியியல் சங்கத் தலைவர் பேராசிரியர் மாகொழுகம, முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர், அரச மருத்துவ சங்க பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினர், தாதிய உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM