6 மாதங்களாக எவ்வித தீர்வுகளும் இன்றி அலைக்கழிக்கப்படும் எமக்கு ஜனாதிபதியே நீதியை பெற்று தாருங்கள் என கண்ணீர் மல்கிய நிலையில் வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட செயலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (28) ஒன்றுக்கூடிய 26 பல்நோக்கு அபிவிருத்தி செயலணித்திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு இவ்வாறு தெரிவித்தனர்.
இதன்போது குறித்த போராட்டத்தில் கைக்குழந்தைகளுடன் பங்கு பற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீனவிடுமுறை போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு பல்வேறு சுலோகங்களை ஏந்திய நிலையில் கோசங்களை எழுப்பியதை காணக்கூடியதாக இருந்தது.
குடும்பங்களை சீர்குலைத்து பிள்ளைகளை நிர்க்கதியாக்காதே, மனிதாபிமானம் இல்லாத செயற்பாட்டை நிறுத்து, வேண்டாம் வேண்டாம் வெளி மாகாணம் வேண்டாம், ஜனாதிபதியே எங்களது பிரசச்சினையை கவனத்தில் எடுங்கள், சிங்கள மொழி தெரியாத எம்மை எமது மாவட்டத்தினுள் உள்வாங்கு, மேன்முறையீட்டு காலத்தை வழங்காமல் இழுத்தடிக்காதே, பல்நோக்கு செயலணி திணைக்களமே எமது பிரச்சிணைக்கு தீர்வினை பெற்று தாருங்கள் என பல்வேறு வாசங்களை மும்மொழிகளிலும் ஏந்தி குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட வெளிமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 26 பேரும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் பட்டதாரி பயிலுநர்களாக இணைப்பு செய்யப்பட்டு 1.1.2021 அன்று நிரந்திர நியமனத்திற்கு உள்வாங்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு உள்வாங்கப்பட்ட 26 பேர் எதுவித நேர்முகப்பரீட்சையும் இன்றி 22.04.2021 அன்று இரவோடு இரவாக மத்திய மாகாணம், ஊவா மாகாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அறிக்கை இட வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இவ்வாறு வெளி மாவட்டத்திற்கு சென்ற 26 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தங்குவதற்கு வசதி இன்றியும் மொழிப்பிரச்சினை காரணமாகவும் சிரமப்பட்ட நிலையில் மேன்முறையீட்டினை மேற்கொண்டனர்.
இருந்தபோதிலும் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் மேன்முறையீடுகள் ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால் ஏனைய திணைக்களத்தில் உள்வாங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களது மேன்முறையீடுகள் மறுபரிசீலணை மேற்கொள்ளப்பட்டு மாற்று இடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் விரக்தி அடைந்த குறித்த பல்நோக்கு அபிவிருத்தி செயலணித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தங்களுக்கும் மேன்முறையீடு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அடிப்படை மனித உரிமையை மீறி நிர்வாகம் செயற்படுவதாக குற்றஞ்சாட்டினர்.
மேலும் போராட்டத்தை தற்காலிகமாக முடித்து கொண்டு மனித உரிமை ஆணைக்குழு பிராந்திய அலுவலகத்திற்கு சென்று முறைப்பாட்டினை வழங்கியுள்ளனர்.
குறித்த பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுவரை குரல்கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா, பதுளை, மொனராகலை, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 26 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பு செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM