நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின், கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
தமிழ் திரை உலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான டிரைடன் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் ஏ. ஆர். என்டர்டெய்ன்மென்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது.
இதனை நடிகரும், இயக்குநருமான கே. எஸ். ரவிக்குமார் இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ராகவா லோரன்ஸின் இளைய சகோதரர் எல்வின் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்.
இவர் ஏற்கனவே ராகவா லோரன்ஸுடன் இணைந்து காஞ்சனா படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். இந்தப்படத்தில் ராகவா லோரன்ஸ் இதுவரை ஏற்றிராத சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு ராகவா லோரன்ஸின் பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டது. படத்தில் பணியாற்றும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நடிகர் ராகவா லோரன்ஸ் பிறந்த நாளுக்காக இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 15 அடி உயரத்தில் ராகவேந்திரரின் சிலை ஒன்றை பிரதிஷ்டை செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM