வரலாறு தெரியாமல் நடக்கமுடியாது. சிங்களம், தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்க வேண்டும். பிணக்குகள் வரும்போது அதனைத் தீர்த்துக் கொடுக்க வேண்டும்.
சமநிலையைக் குழப்புகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களுக்கு நாங்கள் எதிராக இருப்போம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு வீடு காணி உறுதிப்பத்திம் வழங்கி வைக்கும் நிகழ்வு ஒன்று நேற்று வியாழக்கிழமை (28) மாலை 5 மணியளவில் மட்டக்களப்பு களுதாவளை விச்சுக்காலை வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு வீடொன்றில் நடைபெற்றது.
இதன்போது உறுதிப்பத்திரங்களை வழங்கியபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
வீட்டுக்கு வீடு சென்று அமைச்சரொருவர் காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைப்பதென்பது விசித்தரமானதொரு நிகழ்வாக இருக்கலாம்.
காணி அற்றோருக்கு காணி வழங்குவது, காணி உறுதிப்பத்திரம் இல்லாதோருக்கு உறுதிப்பத்திரங்களை வழங்குவது என்ற நோக்கத்தின் அடிப்படையில் காணி அமைச்சர் என்ற அடிப்படையில் காணி அமைச்சரான எஸ்.எம்.சந்திரசேன இதனை முன்னெடுத்து வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி சம்மந்தமான பிரச்சனைகள், பிணக்குகள் உள்ளன. அதனை முடித்து வைப்பதற்கு நாங்கள் அனைவரும் பாடுபடவேண்டும்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடகங்களைப் பார்த்தால் சிங்கள மக்களுக்கு மாத்திரம் அமைச்சர் காணி உறுதிப்பத்திரம் வழங்குவது போன்றும் அதற்கு நாங்களும் துணைபோகின்றோம் என்ற விதத்தில் தெரிவித்துள்ளார். அவர்கள் தவகல்களை பிழையாக வழங்கி தவறாக வழிநடத்தப்படுகின்றார்கள்.
எமது மாவட்டத்திலே, நாட்டிலே வாழ்கின்ற எல்லோருக்கும் காணி இருக்கவேண்டும். அனைவருக்கும் காணி வழங்க வேண்டும்.
மட்டக்களப்பிலே தேவநாயகம் ஐயாவின் காலத்தில் வலை வாடியில் சிங்கள மக்கள் இருந்தார்கள். ஏறாவூரிலே சிங்கள மக்கள் இருந்தார்கள். காணியைப் பற்றித் தெரிந்த நிருவாகிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது தெரியும்.
எனவே பொறுப்பான ஊடகங்கள் அனைத்தும் இனவாதத்தைக் கக்குகின்றதுபோல் நடந்து கொள்ளக்கூடாது.
மிகப்பெரிய கொரோனா தொற்றைத் தடுப்பதற்குப் போராடி, வருமானம் குறைந்திருக்கின்ற வேளையிலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, பல விமர்சனங்களைத் தாண்டி ஜனாதிபதி முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்.
ஆசிரியர் சம்பள பிரச்சனை, அதற்கு அப்பால் தேசியம் கதைப்பவர்களும், வேட்டியை மடித்துக் கொண்டு உரப்பிரச்சனை தொடர்பில் கிளம்பியுள்ளார்கள்.
இவைகளையெல்லாம் முடிவுறுத்தி விளைச்சலை ஏற்படுத்துவதற்கு முயற்சிகளை எடுக்கின்றோம். நாம் எடுக்கின்ற முடிவு இயற்கைக்கும், நிலத்திற்கும், மக்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்தாததாக கொடையாகத்தான் நாம் பார்க்கின்றோம்.
வருத்தமில்லாத சமூகத்தை உருவாக்குவது, பசுமையான நிலத்தை உருவாக்குவது, இதற்கு மக்களும், ஊடகங்களும். ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும். இது ஒரு விவசாய மாவட்டம். விவசாயத்தை மேம்படுத்த வேண்டியுள்ளது என அவர் தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM