இயற்கை உப்பு கொண்ட Clogard 'டெப் அதிர்ஷ்டம்' நீடிப்பு

Published By: Digital Desk 2

29 Oct, 2021 | 02:29 PM
image

வாய்ச் சுகாதாரத்தில் இயற்கை உப்பின் சக்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான Clogard Natural Salt இனது முயற்சியுடன் இணைந்தவாறு, மாணவர்களுக்கு ஒன்லைன் மூலமான கற்றலுக்கு உதவும் வகையில், புத்தம் புதிய டெப் கணனிகளை வெல்லும் வாய்ப்பை ஏற்படுத்தும் ஊக்குவிப்புத் திட்டமே ‘Clogard Natural Salt Tab Wasana’ ஆகும். 

புதிய 120 கிராம் கொண்ட 'Clogard Natural Salt' (Tab Wasana promo pack) பற்பசை பொதியை கொள்வனவு செய்யும் ஒவ்வொருவரும் இக்குலுக்கல் போட்டியில் பங்குபற்றி ஒரு புத்தம் புதிய டெப் இனை வெல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இந்த பொதியானது, நாடு முழுவதும் கிடைக்கிறது. இதில் தனித்துவமான 6 இலக்க இரகசியக் குறியீடொன்று அச்சிடப்பட்டிருக்கும். 

வாடிக்கையாளர்கள் குறித்த இரகசியக் குறியீட்டை, தங்களது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்துடன் பின்வரும் ஒழுங்கில் 8866 எனும் இலக்கத்திற்கு SMS செய்ய வேண்டும்: (TAB <இடைவெளி> இரகசியக் குறியீடு <இடைவெளி> NIC எண்). இப்போட்டி தொடர்பில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதால், இக்குலுக்கலை  எதிர்வரும் நவம்பர் இறுதி வரை தொடர்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், போட்டியில் நுழைய விரும்பும் அனைவருக்கும் இதில் பங்குபற்ற அழைப்பு விடுக்கப்படுகின்றது.

தற்போது வரை இப்போட்டியில் பங்குபற்றிய வெற்றியாளர்களை தெரிவு செய்து டெப் கணனிகளை விநியோகிக்கும் செயன்முறையை 'Clogard Natural Salt' ஆரம்பித்துள்ளது. இதேவேளை, இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்கள் தங்களுக்கு கிடைக்கவுள்ள இப்பரிசு தொடர்பில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளதுடன், அவர்கள் தங்களது புத்தம் புதிய டெப் கணனியை பயன்படுத்தி தங்கள் கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அறிவை பெருக்கிக் கொள்ளவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

எதிர்வரும் வாரங்களில் மேலும் பல அதிர்ஷ்டசாலிகளைத் தெரிவு செய்யவுள்ளதால், நீங்கள் செய்ய வேண்டியது 120 கிராம் Clogard Natural Salt Tab Wasana பொதியை கொள்வனவு செய்து, மேலே குறிப்பிட்டுள்ள செயன்முறைகளைப் பின்பற்றி குலுக்கலில் நுழையுங்கள்.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் தொடர்பில் Clogard நிறுவன சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் ரமிலா பெனாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,  "இயற்கையான உப்பு கொண்ட பற்பசையைப் பயன்படுத்துவதன் நன்மைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதே நேரத்தில், இலங்கையிலுள்ள மாணவர்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தமை தொடர்பில் பெருமையடைகிறோம். 

அந்த வகையில், ஒன்லைன் கற்றலை நோக்கிச் செல்வதில் பல்வேறு கடினங்களை எதிர்கொள்ளும் சிறுவர்களுக்கு ‘டெப் வாசனா’ ஊக்குவிப்புத் திட்டமானது ஒரு வரமாகும். இம்முயற்சியானது, அவர்களின் உடனடி கல்வித் தேவைகளைத் தாண்டி, இந்த டிஜிட்டல் உலகில் முன்னேறிச் செல்ல அவர்களுக்குத் தேவையான வளங்கள் மற்றும் திறன்களுடன் அவர்களுக்கு உரிய அதிகாரத்தை வழங்கும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். 

நாட்டில் பல் பராமரிப்பு மற்றும் வாய்ச் சுகாதாரம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்த நாம் மேற்கொண்டுள்ள இப்பணியில், அனைத்து இலங்கையர்களின் வாழ்வையும் வளமாக்கும் நோக்குடன் நாம் தொடர்ந்தும் எமது பயணத்தை தொடருவோம்." என்றார்.

இலங்கையில் 47% ஆன சிறுவர்கள் பல் ஈறு நோயினால் பாதிப்புக்குள்ளாவதாக, தேசிய வாய்ச் சுகாதார ஆய்வு கண்டறிந்துள்ளது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான விடயமாக இருந்த போதிலும், உங்கள் குழந்தைகளும் அந்த அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து, அதன் மூலம் பற்களைப் பிடுங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் ஆளாக வேண்டுமென அர்த்தம் இல்லை. 

காரணம் இதனை முன்கூட்டியே தவிர்க்க முடியும். உங்கள் குடும்பத்திற்கு மிகச் சிறந்தவற்றை தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பு உள்ளதுடன், சிறந்த வாய்ச் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை விட வேறெதுவும் பெரிதல்ல.

1992ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, Clogard முழுமையான வாய்ச் சுகாதார பராமரிப்பு தீர்வாக மாறியுள்ளதுடன், முழுக் குடும்பத்தையும் பற் குழிகளிலிருந்து பாதுகாப்பளித்து வருகிறது. Clogard இனது, புதிய இயற்கை உப்பு பற்பசை வகையானது, இயற்கை உப்பு, செயற்பாட்டு துத்தநாகம், புளோரைட் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன், ஈறுகளையும், பற்களையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. அத்துடன், கிருமிகளை எதிர்த்துப் போராடுவதன் மூலம் சிறந்த வாய்ச் சுகாதாரத்தையும் உறுதி செய்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் ஆடை துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை...

2025-01-22 18:11:55
news-image

இலங்கையின் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்த ஹெக்ஸாவேர்...

2025-01-23 22:17:56
news-image

சுப்பர் பரிசு வெற்றியாளர்களுக்கான காசோலை வழங்கல்

2025-01-22 15:31:41
news-image

SDB தலைமைத்துவ அணியில் இணையும் பன்முக...

2025-01-22 15:30:55
news-image

' கொமர்ஷல் வங்கி 'ஆண்டின் பசுமை...

2025-01-22 15:10:50
news-image

12 இலவச மருத்துவ முகாம்களுடன் 2024...

2025-01-22 15:43:00
news-image

வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்க இரண்டு...

2025-01-22 15:10:26
news-image

மக்கள் வங்கியின் தைப் பொங்கல் கொண்டாட்டம்

2025-01-22 15:42:44
news-image

LOLC பைனான்ஸ் வழங்கும் முதல் பிரெய்லி...

2025-01-22 15:09:09
news-image

SLT-MOBITEL மற்றும் PEO SPORTS இணைந்து...

2025-01-22 13:46:35
news-image

MMCA இலங்கை ‘முழு நில அமைப்பு’...

2025-01-15 11:09:05
news-image

இலங்கையில் மிகப் பெரிய வெளிநாட்டு விமான...

2025-01-12 09:58:53