(எம்.மனோசித்ரா)

நீர்கொழும்பு – துன்கல்பிட்டி , துன்கல்பிட்டி பொலிஸ் பிரிவில் கெபும்கொட கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ள நபரொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் துன்கல்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ள நபர் 30 - 35 வயதுக்கு இடைப்பட்டவராவார்.

துன்கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.