அ.திமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று காலையில் சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் குடலிறக்க பிரச்சனை ஏற்பட்டது. இதற்காக அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இதுதொடர்பான தொடர் பரிசோதனை மேற்கொள்வதற்காக இன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 

பரிசோதனை முடிந்த பின்னர் இன்று மாலையில் அவர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.