‘ஏப்ரல் 21’ தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கான பொறுப்பை எமது அரசாங்கம் நிச்சயம் நிறைவேற்றும் - பிரதமர் உறுதி

Published By: Vishnu

29 Oct, 2021 | 08:13 AM
image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயமாக நிறைவேற்றுவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ, நேற்று பிற்பகல் கொட்டாஞ்சேனை புனித லுசியா பேராலயத்தில் வைத்து குறிப்பிட்டார்.

May be an image of 2 people

2019, ஏப்ரல் 21ஆம் திகதி, கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தில் இணைந்து கொண்டிருந்த போதே  பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பிரதமர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களினால் இதன்போது நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான குடியிருப்பில் 19 பயனாளிகளுக்கு இவ்வாறு வீடுகள் கையளிக்கப்பட்டன.

May be an image of one or more people, people standing and indoor

வாடகை அடிப்படையிலும் குறைந்த வருமானம் பெறுவோர் என்ற அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்ட 33 பயனாளி குடும்பங்களுக்கு இவ்வாறு புதிய வீடுகள் கையளிக்கப்படவுள்ளதுடன், ஒவ்வொரு வீடுகளினதும் மதிப்பு 40 இலட்சம் ரூபாய்களாகும்.

அருட்தந்தை ஜே. டீ. அன்ரனி ஆண்டகை மற்றும் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் ஆண்டகை, நகர அபிவிருத்தி, கழிவுப்பொருட்களை அகற்றுதல் மற்றும் சமுதாய துப்புரவேற்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா ஆகியோரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

May be an image of 5 people, people standing, people sitting and indoor

மேற்படி நிகழ்வில் பிரதமர் உரையாற்றுகையில் -

“அன்று கொட்டாஞ்சேனை குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கத்தினால் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம்.

நம்மால் தாமதிக்கப்பட்டிருப்பினும், அந்த மக்களுக்கான பொறுப்பை நிச்சயமாக நிறைவேற்ற நாம் தயார். ஏனெனில், அவர்கள் எத்தகைய நிலையில் காணப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம்.

இதேவேளை, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

மக்களுக்கு - நிம்மதியாய் வாழவும், சுதந்திரமாகப் பயணிக்கவும், தத்தமது மதத்தை பின்பற்றவும், கோவிலுக்கும் பள்ளிக்கும் விகாரைக்கும் சென்று வருவதற்குமான உரிமை இருக்க வேண்டும்.

அந்த உரிமையைப் பாதுகாப்பது போன்றே - தமது மத சுதந்திரத்தை அனுபவிக்க, அவர்கள் பாதுகாக்கப்படவும் வேண்டும்.

மேலும், அவரவர்களின் மதத்தைக் பின்பற்ற அவர்கள் அனுமதிக்கப்படவும் வேண்டும். அவ்வாறாயின் அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பேயாகும்.

அதனை எமது கடமையாகவும் நாம் கருதுகின்றோம்.

அதனால், இந்த மக்களுக்காக எமது கடமையை நிறைவேற்றுவதற்கு போன்றே, இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்தமை குறித்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பாக - பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களைச் சந்திக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவர் நினைவுபடுத்தும் ஒரு விடயம் அன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒர் அரசாங்கம் என்ற ரீதியில் எமது பொறுப்பை நாம் நிறைவேற்ற வேண்டும் என்பதாகும்.

எம்மால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம் என்பதை நான் மிகத் தெளிவாக கூற விரும்புகிறேன்.

அதேபோன்று, அவ்வாறானதொரு நிலைமை எதிர்காலத்தில் நிகழாதிருப்பதனை உறுதிசெய்வதும் எமது பொறுப்பாகும்.

அதற்காக நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

அரசாங்கத்தினைப் பொறுப்பேற்றவுடன், வீடற்றவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுப்பதும் எமது கடமையாக இருந்தது.

அதனால், அந்த பயனாளிகளுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தையும் நாம் செயற்படுத்துவோம் என்பதை நினைவுபடுத்துகிறேன்.

நாம் ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவோம். இந்த நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தோம்.

அன்றைய காலகட்டத்தில் சுமார் 27 முதல் 30 வருடங்களாக இந்த நாட்டில் பயங்கரவாதத்தால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்பட்டார்கள் என்பதை நாம் அறிவோம்.

எனவே, நாம் ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழிக்க முடிந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எனவே, எதிர்காலத்தில் பயங்கரவாதத்திற்கு இடமளிக்காமல் சுதந்திரமாக வாழவும், மதத்தை பின்பற்றவும் நாம் நடவடிக்கை எடுப்போம் என்பதை நாட்டு மக்களுக்கு நினைவூட்ட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும், அவர்களுக்கான பிற கடமைகளையும் நிறைவேற்றுவது எமது பொறுப்பாகும்.

எனவே, அதனை எவ்வித சமரசமும் இன்றி நிறைவேற்றுவோம் என்பதையும் நினைவூட்டுகின்றேன்.

ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மத, இன பாகுபாடின்றிச் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எனவே இந்த தருணத்தில் உங்களுக்கு ஏதாவது வழங்கப்பட வேண்டியிருப்பின், அதை வழங்குவது எங்கள் பொறுப்பு.

இந்த தேசத்திற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். இன, மத பேதமின்றி வாழ்வதற்கான பின்னணி ஏற்படுத்ப்பட வேண்டும்.

அதேபோன்று, நாட்டின் அபிவிருத்திக்காகவும் நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இன்று வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற பாகுபாடின்றி நாடு முழுவதும் சமமாக எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்பதைப் புதியதாக கூற வேண்டியதில்லை.

அந்த அபிவிருத்தியுடன் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம்.

எங்கள் கடமையைச் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என்பதை நினைவூட்டுவதுடன், உங்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலம் அமைய எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

மேற்படி நிகழ்வில் - நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய நாணயக்கார, பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பயனாளி குடும்பங்களின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உடுப்பிட்டி மதுபானசாலைக்கு எதிராக தொடர் நடவடிக்கையில்...

2023-12-10 15:15:38
news-image

நிர்மாணத் தொழிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு புதிய...

2023-12-10 15:09:41
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

2023-12-10 14:57:43
news-image

கஞ்சா, போதை மாத்திரைகளுடன் பாடசாலை ஆசிரியர்,...

2023-12-10 14:47:20
news-image

அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோர...

2023-12-10 13:50:58
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல்...

2023-12-10 13:27:16
news-image

"எங்களுடன் இணையுங்கள்" - வட பகுதி...

2023-12-10 13:09:33
news-image

2024 வரவு செலவுத் திட்டம், சர்வதேச...

2023-12-10 13:59:28
news-image

தமிழையும் சிங்களத்தையும் ஒரே நேரத்தில் கற்க...

2023-12-10 12:55:20
news-image

மிஹிந்தலை புனித பூமியில் சேவையாற்ற பாதுகாப்பு...

2023-12-10 12:35:03
news-image

திரிபோஷா, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு...

2023-12-10 12:54:32
news-image

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

2023-12-10 12:20:07