எம்மில் பல பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தங்களின் தோற்றப்பொலிவிற்கு காட்டும் அக்கறையுடனான கவனம் பிரசவத்திற்குப் பின் செலுத்துவதில்லை.  அதே சமயத்தில் தொலைகாட்சியில் மேலைத்தேயப் பெண்கள் பிகினி எனப்படும் கடற்கரையில் சூரிய குளியலுக்கான பிரத்யேக ஆடையை அணிந்து ஓய்வெடுப்பதையும், திருமணமான பெண்களும் வயிற்று பகுதியில் தோல்கள் சுருக்கமில்லாமல் இருப்பதையும் கண்டு பெருமூச்சு விடுவார்கள். இது சென்ற தலைமுறையின் ஆதங்கமாகவே இருந்தது. ஆனால் தற்போது எம்முடைய தெற்காசிய பெண்களும் திருமணத்திற்கு பின்னர் தங்களின் வயிற்றுப்பகுதியில் சுருக்கம் விழாமல் இருப்பதற்கான சிகிச்சை குறித்து விவாதித்து, பாதுகாப்புடன் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்.

பெண்களுக்குவயிற்றுப்பகுதி தோலில் சுருக்கம் ஏற்பட்டு, அங்கு கொழுப்பு அதிகரித்திருக்கும். இதற்குப் பல ஆண்டுகளாக 'டம்மி டக்' என்ற முறையில் தான் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில், சுருக்கம் விழுந்த தோலை எடுத்துவிட்டு மீதமிருக்கும் தோலை ஒருங்கிணைத்துவிடுவார்கள். இத்தகைய தருணங்களில் வயிற்றுப்பகுதியில் பெரிய அளவிலான தழும்பு தோன்றும். இந்த தழும்பு மறையாது. ஆனால் சுப்பர் பிஷியல் லைபோசக்சன் என்ற சத்திர சிகிச்சை மூலம் ‘டைட்னிங் சிகிச்சை’யை மேற்கொண்டால், இந்தத் தழும்பு தோன்றாது. வலியில்லாமல் தோலிலுள்ள சுருக்கங்களும், கொழுப்புகளும் அகற்றப்படும். சத்திர சிகிச்சையின் போது தோலில் ஏற்படும் மாற்றங்களால் தோல் பகுதியில் இறுக்கமும் ஏற்படும்.  அதன் பின்னர் கடற்கரைக்கு சென்று சூரிய குளியலில் ஈடுபடுவார்களோ இல்லையே தன்னளவில் தன்னம்பிக்கை பெறுவார்கள் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

டொக்டர் கார்த்திக் ராம் D N B., MRCS.,

தொகுப்பு அனுஷா

தகவல் : சென்னை அலுவலகம்