பாராளுமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன  கடந்த 26ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார்.

யார் இந்த மஹிந்த யாப்பா அபேவர்தன ? | Virakesari.lk

தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தின் ஊடாக எவரேனும்  நபர் ஒருவரினால் தவறொன்று புரியப்பட்ட நேரத்தில் 18 வயதிற்குட்பட்ட அத்தகைய நபருக்கெதிராக மரணதண்டனைத் தீர்ப்பளிப்பதற்குப் பதிலாக அவரை தடுத்துவைத்தல் நிறுவனம் ஒன்றில் தடுத்து வைப்பதற்கும் ஏற்பாடு செய்வதாக அமையும்.

இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் ‘இளம் ஆள்’ சொல்லமைப்பை பதினெட்டு வயதை அடைந்துள்ளவரும் இருபத்தியிரண்டு வயதை அடையாதவருமான ஆள் ஒருவராக மீளவரையறுப்பதாக அமையும்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டு 24ஆம் இலக்க இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டம் மற்றும் 2021ஆம் ஆண்டு 25ஆம் இலக்க தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் ஆகியன கடந்த 26ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது