குருணாகல் மல்லவபிட்டிய பகுதியில் அதிபரின் தாக்குதலுக்குள்ளான மாணவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த தரம் 12 இல் கல்வி கற்பவரென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அதிபர் மாணவனை துடைப்பம்  ஒன்றினால் தாக்கியுள்ள நிலையில் மாணவனின் கட்டைவிரலில் எழும்பு சேதம் ஏற்பட்டுள்ளதாக மாணவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரகின்றனர்.