இரு அவை சட்டவாக்க முறைமையை மீள நிறுவ இலங்கை அவதானம் - பிரித்தானிய மக்கள் சபநாயகரிடம் பீரிஸ் தெரிவிப்பு

Published By: Digital Desk 4

28 Oct, 2021 | 08:07 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் சட்டவாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலனை செய்து வருவதாகவும், 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இரு அவை கொண்ட சட்டவாக்க முறைமையை மீள நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அவையின் சபாநாயகர் சேர் லிண்ட்சே ஹொய்ல் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றத்தின் பிரதியமைப்பாக இலங்கைப் பாராளுமன்றம் உருவானமையை நினைவு கூர்ந்த அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இரண்டு சட்டவாக்க சபைகளுக்கும் இடையிலான பிணைப்புக்களை வலுப்படுத்துவதில் இலங்கை ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமது சட்டவாக்க நிறுவனங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது குறித்து இலங்கை பரிசீலனை செய்து வருவதாகவும், 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த இரு அவை கொண்ட சட்டவாக்க முறைமையை மீள நிறுவுதல் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 35 வயதிற்குட்பட்ட ஆற்றல் மிகுந்த, சுறுசுறுப்பான பாராளுமன்ற உறுப்பினர்களாவர் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

குழுக்களை வலுப்படுத்துதல் மற்றும் அவற்றுக்கு அதிகமான பொறுப்புக்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வலியுறுத்தினார். பொதுநலவாய சூழலிலான ஒத்துழைப்பு குறித்து குறிப்பிடுகையில், பொதுநலவாயம் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதாகவும், பயனுள்ள பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். பரஸ்பரம் வசதியான நேரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் சேர் லிண்ட்சே ஹொய்லிற்கு அழைப்பு விடுத்தார்.

பாராளுமன்றக் குழுக்களை வலுப்படுத்துவதும், அவற்றிற்கு அதிகாரமளிப்பதும் அரசாங்கத்தின் பணிகளை முறையாக மேற்கொள்வதற்கு வழி வகுக்கும் என சேர் லிண்ட்சே தெரிவித்தார்.

ஒரு சட்டமன்றத்தின் இரண்டாவது அவையைப் பொறுத்தவரை, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவையின் மேலாதிக்கம் முக்கியமானது என்றும், இரண்டாவது அவை மிகையானதாக இருக்கக்கூடாது என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

பொதுநலவாயம் என்பது ஒரு குடும்பம் என்றும், அது ஒருவருக்கு ஒருவர் உதவிகளை நல்குவதாகவும் என்றும் அவர் குறிப்பிட்டார். பௌதீக ரீதியில் சாத்தியமானவரை விரைவில் இலங்கைக்கு நேரில் விஜயம் செய்வதற்கான அழைப்பை சேர் லின்ட்சே ஏற்றுக்கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மக்கள் தங்களின்...

2024-11-13 16:08:47
news-image

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய...

2024-11-14 06:43:27
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : 7...

2024-11-14 06:35:52
news-image

விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும்  அரச...

2024-11-14 01:17:14
news-image

கல்கிஸ்ஸவில் துப்பாக்கிப் பிரயோகம் ; ஒருவர்...

2024-11-13 22:49:09
news-image

வாக்களிப்பின்போது இடது கை ஆட்காட்டி விரல்...

2024-11-13 16:13:49
news-image

குருநகர் புனித யாகப்பர் ஆலயம் அரச...

2024-11-13 21:13:44
news-image

மன்னாரில் வாக்காளர்களுக்கு என வழங்க கொண்டுவரப்பட்ட...

2024-11-13 20:06:35
news-image

வாக்களிக்க விடுமுறை வழங்காவிட்டால் ஒரு மாதகாலம்...

2024-11-13 19:37:11
news-image

தேர்தல் அமைதியாக நடைபெற யாழில்  சர்வமத...

2024-11-13 19:41:42
news-image

ஹோட்டலுக்கு சென்ற நண்பர்கள் குழு மீது...

2024-11-13 18:08:59
news-image

வேன் மோதி பாதசாரி உயிரிழப்பு ;...

2024-11-13 17:56:17