ஆளும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்றுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்பானது இன்று மாலை 5.30 மணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைமையில் அலரிமாளிகையில் ஆரமபமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான தற்போதைய நிலைமை உள்ளிட்ட பல விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.