உலகின் மிகப்பெரிய தொழில்முறைப் பயிற்சியாளர் அமைப்பான சர்வதேச பயிற்சியாளர் கூட்டமைப்பின் அங்குரார்பண நிகழ்வு எதிர்வரும் 21 ஆம் திகதி கொழும்பு, ஹில்டன் ஹோட்டலில் மாலை 5.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Home - International Coaching Federation

தற்போது, 200 க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற, சான்றளிக்கப்பட்ட தொழில்முறை பயிற்சியாளர்கள் மற்றும் சர்வதேச பயிற்சியாளர் கூட்டமைப்புடன் (International coaching Federation) தொடர்புடைய சுமார் 30 அங்கீகாரம் பெற்ற பயிற்சியாளர்கள் உள்ளனர்.

இது 150 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 44,842 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 

இலங்கை பயிற்சியாளர் சமூகம் 2018 இல் தொழில்முறை பயிற்சியாளர்களின் சங்கத்தை (Association of Professional Coaches ) ஆரம்பித்தபோது அதன் அடுத்த படியாக ICF கொழும்பு அத்தியாயத்தை உருவாக்குவது தொடர்பான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 

இது பயிற்சியாளர்களுக்கு சேவை செய்வதற்கும், வாடிக்கையாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், சமூகங்களுக்கும், உலகிற்கும் ஒரு புதிய வழியை உருவாக்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது.