(எம்.எம்.சில்வெஸ்டர்)

கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் கல்கிஸ்ஸை ‍சென். தோமஸ் கல்லூரி கிரிக்கெட் அணிகளுக்கிடையில் தொடர்ச்சியாக 142 ஆவது தடவையாக நடைபெற்று வரும் 'நீலங்களின் சமர்' மாபெரும் கிரிக்கெட் போட்டி  கொழும்பு எஸ்.எஸ்.சீ. மைதானத்தில் இன்று ஆரம்பமாகவுள்ளது. மழை காரணமாக போட்டி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு தடவைகள் பிற்போட்டுவந்த கொழும்பு ரோயல் மற்றும் கல்கிஸ்ஸை சென்.தோமஸ் கல்லூரிகளின் நீலங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மா பெரும் கிரிக்கெட் போட்டியை (BIG MATCH) பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த போட்டியை போட்டி  ஏற்பாட்டுக் குழு  நடத்துகிறது. 

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியானது இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ‍ 

இந்நிலையில், தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலைமை சற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளமை காரணமாக உலகின் நீண்ட காலமாக  தொடர்ச்சியாக நடத்தப்படும் போட்டி என்றதன் காரணமாக பார்வையாளர்கள் எவருமின்றி இப்போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த  நீலங்களின் சமர் போட்டியானது, அவுஸ்திரேலியாவின் சென்.பீட்டர்ஸ் கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பிரெட் கல்லூரிகளின் கிரிக்கெட் போட்டிக்கு அடுத்ததாக உலகின் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இரண்டாவது கிரிக்கெட் போட்டி  என்பது குறிப்பிடத்தக்கது.