ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ண போட்டியின் சூப்பர் 12 சுற்றின் 22 ஆவது போட்டி இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று (28) டுபாயில் நடைபெறவுள்ளது.
இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
சூப்பர் 12 சுற்றில் தோல்வியடையாத இரு அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெறும் அணி தோல்வியின்றி முன்னேறுவது மட்டுமல்லாமல் இரு நாடுகளுக்கு இடையேயான டி-20 போட்டி வரலாற்றில் அதிக வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் பெறும்.
இரு அணிகளும் இதுவரை 16 இருபதுக்கு-20 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அந்த வெற்றிகளில் முன்னிலை பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
டி-20 உலகக் கிண்ணத்தில் இரு அணிகளும் மூன்று முறை சந்தித்துள்ளன, அதில் அவுஸ்திரேலியா இரண்டு முறை (2007 மற்றும் 2010) வென்றது, இலங்கை ஒருமுறை (2009) மாத்திரம் வென்றுள்ளது.
எவ்வாறாயினும், கடந்த நான்கு தடவைகள் இரு நாடுகளும் மோதிய டி-20 போட்டிகளில் அவுஸ்திரேலிய அணி வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
சூப்பர் 12 சுற்றில் 'ஏ' குழு மிகவும் கடினமான குழுவாக இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் அரையிறுதிக்கு தகுதி பெறுவது முக்கிய வாய்ப்பினை வழங்கும்.
சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் பங்களாதேஷை தோற்கடிப்பதற்கு முன், இலங்கை அணி தனது முதல் சுற்றுப் போட்டிகளில் எதிர்கொண்ட மூன்று ஆட்டங்களையும் வென்றுள்ளது.
தற்சமயம் நான்கு ஆட்டங்கள் கொண்ட வெற்றிப் பாதையில் அவுஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ளவுள்ளது.
5.00 என்ற சாரசரியுமன் தலா 5.62 ஓட்டங்களில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, மூன்று வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக தீக்ஷனா இருந்தார். ஆனால் இலங்கையின் இறுதி முதல் சுற்று ஆட்டத்தில் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை.
எனினும் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவதற்கு அவர் முழு தகுதியுடன் இருக்கிறார் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் உறுதிபடுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM