பரபரப்பான போட்டியில் நமீபியா அணி ஸ்கொட்லாந்து அணியை 4 விக்கெட்டுகளால் தோற்கடித்துள்ளது.

Ruben Trumpelmann is mobbed by his team-mates in the first over, Scotland vs Namibia, T20 World Cup 2021, Group 2, Abu Dhabi, October 27, 2021

இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பங்குபற்றும் நமீபியா பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

இந்நிலையில் சுப்பர் 12 சுற்றிலும் ஸ்கொட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை இலக்கு வைத்து இன்றைய போட்டியை எதிர்கொண்ட நமீபியா 4 விக்கெட்டுகளால் அந்த வெற்றியை ருசித்தது.

ஸ்கொட்லாந்துக்கு எதிராக அபு தாபியில் இன்று இரவு நடைபெற்ற குழு 2க்கான இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று போட்டியில் நமிபியா 4 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இருபது 20 உலகக் கி;ண்ண கிரிக்கெட்டில் முதல் தடவையாக பங்குபற்றும் நமிபியா இந்த வெற்றியை ஈட்டியதன் மூலம் பிரதான சுற்றில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று வரலாறு படைத்தது.


நமிபியாவின் இந்த வெற்றியில் ருபென் ட்ரம்ப்பெல்மான், ஜேன் ப்ரைலின்க் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் ஜே.ஜே. ஸ்மித்தின் சிறப்பான துடுப்பாட்டமும் பிரதான பங்காற்றின.


எவ்வாறாயினும் இந்த வெற்றி நமிபியாவுக்கு இலகுவாக அமையவில்லை.
பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியில் ஸ்கொட்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 110 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமிபியா, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


ஆரம்ப விக்கெட்டில் 28 பந்துகளில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களைப் பெற்ற நமியா 10ஆவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் இழப்பக்கு 50 ஓட்டங்களைப் பூர்த்தி செய்ததிருந்தது.

தொடர்ந்து 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3 விக்கெட்களை இழந்த நமிபியா தடுமாற்றம் அடைந்தது.


ஆனால் டேவிட் வைஸ், ஜே.ஜே. ஸ்மித் ஆகய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகம் கொடுத்தனர். அதன் பின்னர் 2 விக்கெட்கள் சரிந்த போதிலும் ஸ்மித் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி வெற்றி ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.


துடுப்பாட்டத்தில் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் க்ரெய்க் வில்லியம்ஸ் 23 ஓட்டங்களையும் மைக்கல் வென் லிங்கென் 18 ஓட்டங்களையும் டேவிட் வைஸ் 16 ஓட்டங்களையும் பெற்றார்.


ஸ்கொட்லாந்து பந்துவீச்சில் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.


இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
நமிபியர்களின் பந்து வீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்கிய ஸ்கொட்லாந்தின் முதல் நான்கு விக்கெட்கள் சரிந்தபோது 6ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை வெறும் 18 ஓட்டங்களாக இருந்தது.


மெத்யூ க்ரொஸ் (19), மைக்கல் லீஸ்க் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் தொடர்ந்து லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ் (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 36 ஓட்டங்களையும் பகிர்ந்ததால் ஸ்கொட்லாந்து 100 ஓட்டங்களைக் கடந்தது.
க்றீவ்ஸ் 27 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்ட்றிகள், 2 சிக்ஸ்களுடன் 44 ஓட்டங்களைக் குவித்தார்.


நமிபியா பந்துவீச்சில் ருபென் ட்ரம்ப்பெல்மான் 4 ஓவர்களில் 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜென் ப்ரைலின்க் 4 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.  - (என்.வீ.ஏ.)