பங்களாதேஷுக்கு எதிராக துபாய் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற குழு ஒன்றுக்கான இருபதுக்கு - 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து மிக இலகுவாக 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான தனது வாய்ப்பை இங்கிலாந்து அதிகரித்துக் கொண்டுள்ளதுடன் பங்களாதேஷின் வாய்ப்பு கேள்விக் குறியை நோக்கி நகர்கின்றது.
மேலும் இந்தப் போட்டி முடிவுடன் 2 நேரடி வெற்றிகளுடன் 4 புள்ளிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்து குழு 1 இல் முதல் இடத்தை வகிக்கின்றது.
மொயீன் அலி, டய்மல் மில்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் ஜேசன் ரோய் குவித்த அதிரடி அரைச் சதமும் இங்கிலாந்தின் வெற்றியை சுலபப்படுத்தின.
பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 125 ஓட்டங்கள் சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 14.1 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
ஆரம்ப வீரர் ஜேசன் ரோய் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 38 பந்துகளில் 5 பவுண்ட்றிகள், 3 சிக்ஸ்களுடன் 61 ஓட்டங்களைக் குவித்தார்.
18 ஓட்டங்களைப் பெற்ற ஜொஸ் பட்லருடன் முதலாவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்த ஜேசன் ரோய், 2ஆவது விக்கெட்டில் மேலும் 83 ஓட்டங்களை டேவிட் மாலனுடன் பகிர்ந்தார்.
மாலன் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்ததுடன் ஜொனி பெயர்ஸ்டோ 8 ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களைப் பெற்றார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ், எதிரணியினரின் பந்துவீச்சுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
தனது முதலாவது ஓவரில் 10 ஓட்டங்களைக் கொடுத்த மொயின் அலி, தனது 2ஆவது ஓவரில் பங்களாதேஷின் ஆரமப வீரர்களான லிட்டன் தாஸ் (9 ஓட்டங்கள்), மொஹம்மத் நய்ம் (5) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்தார்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷக்கிப் அல் ஹசன் 4 ஓட்டங்களுடன் வோக்ஸின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
முஷ்பிக்குர் ரஹிம் (29), அணித் தலைவர் மஹ்முதுல்லாஹ் (19) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைக் கட்டி எழுப்ப முயற்சித்தனர். ஆனால், ரஹிம், அபிப் ஹொசன் (5), மஹ்முதுல்லாஹ் ஆகிய மூவரும் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் களம் விட்டகன்றனர்.
நூருள் ஹசன் (16), மஹேதி ஹசன் (11), நசும் அஹ்மத் (9 பந்துகளில் 19 ஆ.இ.) ஆகிய பின்வரிசை வீரர்கள் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றிராவிட்டால் பங்களாதேஷ் மேலும் மோசமான நிலையை அடைந்திருக்கும்.
இங்கிலாந்து பந்துவீச்சில் டய்மல் மில்ஸ் 4 ஓவர்களில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் லியாம் லிவிங்ஸ்டோன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொயீன் அலி 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
(என்.வீ.ஏ.)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM