யாழ் மாநகர சபையின் சொத்தாக இருக்கும் ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க முடியாது என யாழ் மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போதே இவ்வாறு தீர்மாணம் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.