இலங்கை வருபவர்களுக்கு புதிய சுகாதார வழிகாட்டல் சுற்று நிரூபம் வெளியானது

27 Oct, 2021 | 04:16 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய முழுமையாக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்கள் விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 72 மணித்தியாலத்திற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்து கொவிட் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று விசேட வைத்திய நிபுணர் டில்ஹானி சமரசேகர தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

இதே வேளை நாட்டுக்கு வருகை தரும் பிரஜைகள் கடந்த 3 மாத காலத்திற்குள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களாகக் காணப்பட்டால் , விமான பயணத்தை ஆரம்பிப்பதற்கு 48 மணித்தியாலயத்திற்கு முன்னர் அன்டிஜன் பரிசோதனையை முன்னெடுத்திருத்தல் போதுமானது.

அத்தோடு முதற்கட்டமாகவோ அல்லது முழுமையாகவோ தடுப்பூசியைப் பெற்றவர்கள் ஆங்கில மொழியில் அது தொடர்பான ஆவணத்தை வைத்திருக்க வேண்டும். அதே போன்று பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தால் அவை தொடர்பான அறிக்கையையும் ஆங்கில மொழியில் வைத்திருக்க வேண்டும்.

இலங்கைக்கு வருவதற்கு முன்னர் முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுள்ளவர்கள், விமான பயணத்தை ஆரம்பிக்க 72 மணித்தியாலத்திற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுத்து தொற்று ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் , இலங்கையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை.

தடுப்பூசி பெற்றுக் கொள்ளதவர்கள் அல்லது முதற்கட்ட தடுப்பூசியை மாத்திரம் பெற்றுள்ளவர்கள் விமான நிலையத்திலும் , இலங்கை பிரஜைகளாயின் அரச நிலையங்களிலும் பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறானவர்கள் தமது வீடுகளுக்குச் சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் ஈடுபட வேண்டும்.

நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படும் இலங்கை பிரஜைகள், வதிவிட வீசா கொண்ட பிரஜைகள், இரட்டை குடியுரிமை கொண்ட பிரஜைகள் வீடுகளிலேயே சிகிச்சை பெறுவதற்கு தம்மை பதிவு செய்ய வேண்டும் என்பதோடு , பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவிற்கும் அறிவிக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04