(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் மீதும் பொலிஸ் மீதும் குற்றஞ்சாட்ட முடியாது.
விசாரணை நடவடிக்கைகள் தொடர்பிலான அனைத்து அறிக்கைகளும் சட்டமாதிபர் திணைக்களத்திடம் சமர்பிக்கப்பட்டுள்ளது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.
விசாரணை அறிக்கைகள் சட்டமாதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதுவரையில் 5 மேல் நீதிமன்றங்களில் 9 வழக்கு இடம்பெறுவதுடன்,
24பேருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஆகவே குண்டுத்தாக்குதல் சம்பவம்தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு அலல்து பொலிஸிற்கு எதிராக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
பொலிஸ் தரப்பிற்கு பொறுப்பான அமைச்சர் என்ற ரீதியில் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அனைத்து விசாரணை அறிக்கைகளையும் சட்டமாதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளேன். அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை சட்டமாதிபர் முன்னெடுக்க வேண்டும்.
குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.குற்றத்துடன் தொடர்புடையவர்களை தண்டிக்க வேண்டிய பொறுப்பு நீதிமன்றிற்கு உண்டு.
விசாரணைகள் அரசியல் தலையீடுகளின்றி சுயாதீனமான முறையில் முன்னெடுக்கப்படுகின்றன.
பொது மக்கள் அச்சமில்லாமல் வாழும் சூழல் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் வியாபாரத்தை இல்லாதொழிக்க பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM