(எம்.மனோசித்ரா)

சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 11 ஆம் திகதி பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய சிறு கட்சிகளை சந்திக்கவுள்ளோம். 

அரசாங்கத்தை வீழ்த்தி சுதந்திர கட்சியின் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கவில்லை என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று  புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.