இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களினதும் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான மாதாந்த சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்புக்களுக்கான பிரேரணை 68 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது. 

குறித்த பிரேரணைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று புதன் கிழமை விவாதத்திற்கு சமர்பிப்பித்திருந்தார்.  அதனைத் தொடர்ந்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினர் இடையே கடுமையான வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

 இதனையடுத்து மாலையில் குறித்த பிரேரணைகள் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.  இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவணியான ஒன்றிணைந்த எதிரணியினர் சர்ச்சையை ஏற்படுத்தியவாறு வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியிருந்தனர். 

அச்சமயத்தில் பிரதான எதிர்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று உறுப்பினர்ளும், ஜே.வி.பிசார்பில் இரண்டு உறுப்பினர்களும் பிரசன்னமாகி ஆதரவை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.