மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

Published By: Digital Desk 4

27 Oct, 2021 | 05:01 PM
image

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரை இடமாற்றக் கோரி மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆதி அருணாச்சலம் தலைமையில் சபை  உறுப்பினர்களால் இன்றைய தினம் புதன்கிழமை (27) காலை 11 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளரின்   ஆளுமையற்ற செயற்பாட்டாலும் வினைத்திறன் அற்ற முடிவுகளாலும் அபிவிருத்திகள் மற்றும் வேலை திட்டங்கள் அனைத்தும் பின் நோக்கி காணப்படுவதாகவும் எழுத்து மூல செயற்பாடுகள் மட்டுமே இடம்பெறுவதாகவும் பௌதீக செயற்பாடுகள் எவையும் இடம் பெறுவதில்லை என கோரி இன்று புதன்கிழமை (27)  காலை மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மேலும் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர்  ஊழல் செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் , குறிப்பாக கொள்வனவுகள் , எரிபொருள் விற்பனைகள் என்பவற்றில் ஊழல் மேற்கொண்டுள்ளதாகவும் அதை உறுப்பினர்கள் உறுதிப்படுத்தி வழங்கியதாகவும் ஆனால் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட உறுப்பினர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால்  அதிகம் பாதிக்கப்பட்ட மாந்தை மேற்கு பகுதியில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாந்தை மேற்கு பிரதேச சபையின் செயலாளர் தொடர்ந்தும் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் சபை தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக பல முறை உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்கள் இடம் மாற்றம் செய்வதாக கோரியும் இதுவரை இடமாற் செய்யவில்லை என்றும், விரைவில் புதியதொரு ஆளுமையுள்ள பிரதேச சபை  செயலாளர் ஒருவரை   நியமிக்குமாறும் அவ்வாறு நியமிக்காத பட்சத்தில் இன்னும் பல போராட்டங்களை மேற்கொள்ள தாங்கள் தயாராக உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47