வாகன விபத்துக்களில் 9 பேர் பலி - பொலிஸ் பேச்சாளர்

By Gayathri

27 Oct, 2021 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்கிழமை மற்றும் அதற்கு முந்தைய தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இவர்களில் நால்வர் செவ்வாயன்று இடம்பெற்ற விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பாதசாரிகள் நால்வர், மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், சைக்கிளில் சென்ற மூவர் உள்ளடங்குகின்றனர்.

கொவிட் அச்சுறுத்தலால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த போக்குவரத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் பிரதான வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

எனவே இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறு போக்குவரத்து தலைமையகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right