அனுராதபுரம் மாவட்டத்தில் இரு புதிய மாவட்ட நீதிமன்றங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அனுராதபுர மாவட்டத்தில் 157 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மதவாச்சி மாவட்ட நீதிமன்றம் மற்றும் 102 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கஹட்ட கஸ்திலிய மாவட்ட நீதிமன்ற கட்டடம் இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட இரு புதிய நீதிமன்றங்களையும் நீதி அமைச்சர் அலிசப்ரி மக்கள் பாயன்பாட்டுக்காக திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.