முதல் முறையாக உலகக் கிண்ணத் தொடரில் நமீபியா ! ஸ்கொட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்யுமா ?

27 Oct, 2021 | 11:27 AM
image

இருபது 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் முதல் தடவையாக களம் காணும் நமீபியா குழு 2 க்கான போட்டியில் ஸ்கொட்லாந்தை அபு தாபியில் இன்று (27) இரவு (7.30 மணி) எதிர்த்தாடவுள்ளது.

இருபது 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை பங்குபற்றும் நமீபியா பி குழுவில் அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

சுப்பர் 12 சுற்றிலும் ஸ்கொட்லாந்துக்கு எதிராக வரலாற்று வெற்றியை இலக்கு வைத்து இன்றைய போட்டியை நமீபியா எதிர்கொள்ளவுள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் ஸ்கொட்லாந்தை நமீபியா வெற்றி கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு அணிகளும் தமது குழுவில் இடம்பெறும் மற்றைய அணிகளை வெற்றிகொள்ளும் என கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. எனினும் இன்றைய போட்டியில் இரண்டு அணிகளில் ஒன்று வெற்றி பெறப்போவது உறுதி.

மறுபுறத்தில் பி குழுவில் முதல் சுற்று ஆட்டத்தில் பங்களாதேஷை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்த ஸ்கொட்லாந்து, அக் குழுவில் இடம்பெற்ற ஓமான், பப்புவா நியூ கினி ஆகிய அணிகளையும் இலகுவாக வெற்றி கொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்றுள்ள 2 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியிலும் நமிபியா வெற்றிபெற்றுள்ளது. எனினும் இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என அனுமானிப்பது இலகுவல்ல.

அணிகள்

நமீபியா: ஸேன் க்றீன், க்ரெய்க் வில்லியம்ஸ், ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் (அணித் தலைவர்), டேவிட் வைஸ், ஜே.ஜே. ஸ்மித், ஜேன் ப்ரைலின்க், ஜேன் நிக்கோல் லொவ்டி ஈட்டன், மைக்கல் வென் லிங்கென் அல்லது ஸ்டீவன் பார்ட், ரூபென் ட்ரம்ப்ல்மான், பிக்கி யா ப்ரான்ஸ், பேர்னார்ட் ஷோல்ட்ஸ்.

ஸ்கொட்லாந்து: கய்ல் கோர்ட்ஸர் (தலைவர்), ஜோர்ஜ் மன்சி, கெலம் மெக்லியோட், ரிச்சி பெரிங்டன், மெத்யூ க்ரொஸ், மைக்கல் லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், ஜொஷ் டாவி, சய்வான் ஷரிப், ப்றெட் வீல்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right