சாலாவ வெடிப்பு சம்பவத்தினால் வீடுகளை இழந்தவர்களுக்கு மேலும் மூன்று மாத காலம் 50 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து நிதியமைச்சு சமர்ப்பிக்கவுள்ளது.

குறித்த தீர்மானம் இன்று (21) நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கொடுப்பனவை வழங்குவதில் மோசடிகள் இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்  நிதியமைச்சர் கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.