நியூசிலாந்து அணிக்கு எதிரான பரபரப்பான இருபதுக்கு - 20 போட்டியில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

Babar Azam lofts over the off side, Pakistan vs New Zealand, T20 World Cup 2021, Group 2, Sharjah, October 26, 2021

இருபது 20 உலக கிண்ணத்தில் பாகிஸ்தானின் 2ஆவது வெற்றிக்கு ஹரிஸ் ரவூப் வித்திட்டார்
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது உலகக் கி;ண்ண அத்தியாயத்தில் சுப்பர் 12 சுற்றில் குழு 1இல் இடம்பெறும் பாகிஸ்தான் இரண்டாவது வெற்றியை இன்று செவ்வாய்க்கிழமை (26) ஈட்டிக்கொண்டது.


துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிறன்று இந்தியாவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை ஈட்டிய பாகிஸ்தான், ஷார்ஜாவில் இன்று நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்களால் வெற்றிபெற்றது.
இதன் மூலம் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை சிறுகசிறுக பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டுசெல்கின்றது.


நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தடிhய பாகிஸ்தான் 18.2 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.


இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய அணித் தலைவர் பாபர் அஸாம் இன்றைய போட்டியில் 9 ஓட்டங்களுடன் வெளியேற, தொடர்ந்து பக்கார் ஸமான் (11), சிரேஷ்ட வீரர் மொஹம்மத் ஹபீஸ் (11) ஆகிய இருவரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்காமல் ஆட்டமிழந்து சென்றனர். (63 -3 விக்.)


இதனிடையே சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த ஆரம்ப வீரர் மொஹம்மத் ரிஸ்வான் 33 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். (69-4 விக்.).


அவரைத் தொடர்ந்து 15ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை 87 ஓட்டங்களாக இருந்தபோது இமாத் வசிம் 11 ஓட்டங்களுடன் 5ஆவதாக ஆட்டமிழந்தார். இதன் காரணமாக போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்படுவதாக தென்பட்டது.


ஆனால், மற்றொரு சிரேஷ்ட வீரரும் உலகக் கிண்ணப் போட்டி நெருங்கும்போது மாற்று வீரராக குழாத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டவருமான ஷொயெப் மாலிகும் அசிப் அலியும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானின் வெற்றியை உறுதி செய்தனர்.


அசிப் அலி துணிவை வரவழைத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 12 பந்தகளில் 3 சிக்ஸ்கள், ஒரு பவுண்ட்றி அடங்கலாக 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். ஷொயெப் மாலிக் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களைப் பெற்றார்.


நியூஸிலாந்து பந்துவீச்சில் இஷ் சோதி 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுதுடன் டிம் சௌதி (25-1 விக்.), ட்ரென்ட் போல்ட் (29-1 விக்.), மிச்செல் சென்ட்னர் (33-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.


இப் போட்டியில் முன்னதாக துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.


பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நியூஸிலாந்து துடுப்பாட்டத்தில் இருவர் மாத்திரம் அதிகப்பட்சமாக தலா 27 ஓட்டங்களைப் பெற்றனர்.
மேலும் சிறப்பான இணைப்பாட்டங்களை நியூஸிலாந்து வீரர்களால் கட்டி எழுப்ப முடியாமல் போனமையும் அதன் தோல்விக்கு காரணமானது.


ஆரம்ப விக்கட்டில் மார்ட்டின் கப்டில் (17), டெரில் மிச்செல் (27) ஆகிய இருவரும் பகிர்ந்த 36 ஓட்டங்களே அவ்வணியின் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.
இவர்களை விட அணித் தலைவர் கேன் வில்லியம்சன் (25), டெவொன் கொன்வோய் (27) ஆகிய இருவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.


மத்திய மற்றும் பின்வரிசையில் எவரும் திறமையை வெளிப்படுத்தவில்லை.
பாகிஸ்தான் பந்துவீச்சில் ஹரிஸ் ரவுப் 4 ஓவர்களில் 22 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 4 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.


மொஹம்மத் ஹவீஸ் (16-1 விக்), ஷஹீன் ஷா அப்றிடி (21-1 விக்), இமாத் வசிம் (24-1 விக்.) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
இது இவ்வாறிருக்க நியூஸிலாந்து குழுhத்தில் இடம்பெற்ற லொக்கி பேர்குசன் இன்றைய போட்டி ஆரம்பமாவதற்கு முன்னர் உபாதைக்குள்ளானதால் தொடர்ந்து உலகக் கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.  - - (என்.வீ.ஏ.)

Hasan Ali was confident after getting in a direct hit, Pakistan vs New Zealand, T20 World Cup 2021, Group 2, Sharjah, October 26, 2021

Who said revenge? Babar Azam has a laugh with the ever-smiling Kane Williamson at toss, Pakistan vs New Zealand, T20 World Cup 2021, Group 2, Sharjah, October 26, 2021