தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (26) சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுபெற்ற இருபது 20 உலகக் கிண்ண குழு 1க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தென் அபிரிக்கா 8 விக்கெட்களால் அமோக வெற்றிபெற்றது.
தத்தமது முதலாவது போட்டிகளில் தோல்விகளைத் தழுவிய நிலையில் இன்றைய போட்டியில் வெற்றியை இலக்குவைத்து விளையாடிய இந்த இரண்டு அணிகளில் தென் ஆபிரிக்கா அதனை நிறைவேற்றிக்கொண்டது.
ட்வெய்ன் ப்ரிட்டோரியஸின் துல்லியமான பந்துவீச்சு, ஏய்டன் மார்க்ராம், ரெசி வென் டேர் டுசென் ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன.
இன்றைய போட்டியில் தென் ஆபிரிக்க அணியிலிருந்து முற்றிலும் எதிர்பாராதவிதமாக கடைசி நேரத்தில் தனிப்பாட்ட காரணத்துக்காக தானகவே நீங்கிக்கொள்வதாக குவின்டன் டி கொக் அறிவித்தார். அவருக்குப் பதிலாக ரீஸா ஹெண்ட்றிக்ஸ் அணியில் சேர்க்கப்பட்டதுடன் ஹெய்ன்ரிச் க்ளாசென் விக்கெட் காப்பாளராக விளையாடினார்.
கறுப்பினத்தவரின் உயிர்களும் முக்கியம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில் முழந்தால்படியிட மறுத்த பின்னரே அவர் அணியிலிருந்து நீங்கிக்கொள்வதாக அறிவித்தார்.
இதேவேளை, மேற்கிந்தியத் தீவுகளினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 18.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
மொத்த எண்ணிக்கை வெறும் 4 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரரும் அணித் தலைவருமான டெம்பா பவுமா 2 ஓட்டங்களுடன் முதல் ஓவரின் கடைசிப் பந்தில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததும் தென் ஆபிரிக்கா சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ரெஸி வென் டேர் டுசென் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு பலம் சேர்தனர்.
ஹெண்ட்றிக்ஸ் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து ரெசி வென் டேர் டுசென், ஏய்டன் மார்க்ராம் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச்செய்தனர்.
வென் டேர் டுசென் 43 ஓட்டங்களுடனும் ஏய்டன் மார்க் ராம் 26 பந்துகளில் 4 சிக்ஸ்கள், 2 பவுண்ட்றிகள் அடங்கலாக 51 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், எவின் லூயிஸ் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் 20 ஒவர்களில் 8 விக்கெட்களை இழந்து 143 ஒட்டங்களைப் பெற்றது.
எவின் லூயிஸ் 35 பந்துகளை எதிர்கொண்டு 6 சிக்ஸ்கள், 3 பவுண்ட்றிகளுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார்.
இவரை விட கீரன் பொலார்ட் (26), லெண்ட்ல் சிமன்ஸ் (18), நிக்கலஸ் பூரண் (12), கிறிஸ் கேல் (12) ஆகியோரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
இவர்களுடன் மற்றைய அதிரடி ஆட்டக்காரர்களான அண்ட்ரே ரசல், ஷிம்ரன் ஹெட்மியர், ட்வேன் ப்ராவோ ஆகியோர் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டனர்.
தென் ஆபிரிக்க பந்துவீச்சில் சாதிக்க வல்லவர் என கருதப்பட்ட தப்ரெய்ஸ் ஷம்சி 37 ஓட்டங்கள் கொடுத்து விக்கெட் எதனையும் வீழ்த்தவில்லை. மாறாக 32 வயதான ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ் திறமையாக பந்துவீசி 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் கேஷவ் மஹாராஜ் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
(என்.வீ.ஏ.)
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM