ஜெவ்னா கிங்ஸ் அணியில் டு ப்ளெசிஸ், வஹாப் ரியாஸ்

26 Oct, 2021 | 06:59 PM
image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புகழ்பூத்த வீரர்களாகத் திகழ்ந்த தென் ஆபிரிக்காவின் முன்னாள் அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ், பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் ஆகிய இருவரும் ஜெவ்னா கிங்ஸ் அணி சார்பாக 2 ஆவது லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட் அத்தியாயத்தில் விளையாடவுள்ளனர்.

இவர்களில் பப் டு ப்ளெசிஸ் வெளிநாட்டு நட்சத்திர (icon) வீரராகவும் வஹாப் ரியாஸ் வெளிநாட்டு வைர (diamond)  வீரராகவும் ஜெவ்னா கிங்ஸ் அணியில் இடம்பெறுகின்றனர்.

தென் ஆபிரிக்க அணியில் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னணியில் திகழ்ந்த சர்வதேச துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான  பவ் டு ப்ளெசிஸ் 69 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் 143 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 50 இருபது 20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இருந்ததுடன் 100 ஐபிஎல் போட்டிகளையும் பூர்த்தி செய்துள்ளார்.

இவர் தனது தனித் திறமையைக் கொண்டு இருபத 20 போட்டிகளில் தனது அணியை பல வெற்றிகளுக்கு வழிநடத்தியிருந்தார்.

தென் ஆபிரிக்க டெஸ்ட் அணியின் தலைவராக 2016இல் நியிமக்கப்பட்ட பவ் டு ப்ளெசிஸ், அடத்த வருடமே மூவகை சர்வதேச கிரிக்கெட்டிலும் தென் ஆபிரிக்க அணித் தலைவரானார்.

இவ் வருட இண்டியன் ப்றீமியர் லீக் இறுதிப் போட்டியில் அபார அரைச் சதம் குவித்து சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை சம்பினாக்கியதுடன் ஆட்டநாயகன் விருதையும் வென்றிருந்தார்.

இறுதிப் போட்டியில் 86 ஓட்டங்களைப் பெற்ற பவ் டு ப்ளெசிஸ் சுற்றுப் போட்டியில் 633 ஓட்டங்களை மொத்தமாக பெற்ற ஐபிஎல்லில் அதிக ஓட்டங்கள் பெற்றவர்கள் வரிசையில் 2ஆம் இடத்தில் இருந்தார்.

பாகிஸ்தானின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ், ஜெவ்னா கிங்ஸ் அணியில் இணைந்துள்ள 2ஆவது வெளிநாட்டு வீரராவார்.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான வஹாப் ரியாஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தானின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவராவார்.

இருபரு 20 கிரிக்கெட் போட்டிகளில் மிகுந்த அனுபசாலியான வஹாப் ரியாஸ், 2015 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்தமாக 16 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்திருந்தார்.

மணித்தியாலாத்துக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் பந்துவீசக்கூடிய ஆற்றல் மிக்க வஹாப் ரியாஸ், 300 சர்வதேச இருபது 20 கிரக்கெட் போட்டிகளில் 361 விக்கெட்களை மொத்தமாக வீழ்த்தியுள்ளார்.

அத்துடன் 91 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 91 விக்கெட்களைக் கைப்பற்றியள்ளார்.

லங்கா பிறீமியர் லீக் இருபது 20 கிரிக்கெட்டில் ஜெவ்னா கிங்ஸ் ஓர் உரிமைத்துவ அணியாக விளையாடுகின்றது. அவ்வணியின் உரிமையாளராக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பிரித்தானிய தொழில் அதிபர் அல்லிராஜா சுபாஸ்கரன் திகழ்கின்றார்.

இவர் லைகா குழும நிறுவனங்களின் ஸ்தாபகத் தலைவராவார்.

லைகா குழுமம் பிரித்தானியாவில் ஒரு கூட்டுநிறுவனமாகும். தொலைத்தொடர்பு, பொழுதுபோக்கு, பயணம் மற்றும் சுற்றுலாத்துறை, சுகாதார பராமரிப்பு,  ஊடகம், தொழில்நுட்பம், நிதி சேவைகள், சந்தைப்படுத்தல் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றில் அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது.

லைகா குழுமமானது இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் வலுவான முன்னிலையுடன் தெற்காசிய பிராந்தியத்தில் தனது வளங்களைப் பன்முகப்படுத்திவருகின்றது.

ஜெவ்னா கிங்ஸ் அணிதான் தனது தலைமைத்துவ நிலைகளை அறிவித்த முதலாவது லங்கா பறீமியர் லீக் உரிமைத்துவ அணியாகும்.

இதற்கு அமைய  கணேஷன் வாகீசன் கிரிக்கெட் பணிப்பாளராகவும் தில்லின கண்டம்பி தலைமைப் பயிற்றுநராகவும் திசர பெரேரா அணித் தலைவராகவும் சாரங்க விஜயரட்ன (கூட்டாண்மை சந்தைப்படுத்தல், தொடர்பாடல் மற்றும் ஊடகப் பணிப்பாளராகவும் முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35