1971 ஆம் ஆண்டு இந்திய - பாகிஸ்தான் போர், பங்காளதேசத்தை உருவாக்கியது. துணைக் கண்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்தது. 

இவ்வாறான புறசூழலுக்கு  மத்தியில் இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்து விட்டதாக முன்னாள் வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமானம் மற்றும் மனித வளர்ச்சிக் குறிகாட்டிகளின் அடிப்படையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை முந்தியதால் பங்களதேசம் இன்று வளர்ச்சி நாடாக உள்ளது. 

இந்திய துணைக் கண்டத்தில், இருமுனைப் போரின் மூலம் இந்தியாவை அச்சுறுத்தும் திறனை பாகிஸ்தான் இழந்ததோடு, பல ஆண்டுகளாக வழக்கமான போரைத் தொடங்குவதற்கான நம்பிக்கையையும் இழந்துள்ளது. 

இதன் விளைவு இந்தியாவுக்கு ஆதரவாக அதிகார சமநிலையை சாய்த்துள்ளது. 1971 ஆம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50 ஆவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கின் கீழ் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றிய முன்னாள் இராஜதந்திரியான சிவசங்கர் மேனன் மேலும் குறிப்பிடுகையில், 

கார்கிலில் தோல்விக்கு பின்னர்  பாரம்பரியப் போரில் இந்தியாவுடன் ஒப்பிட முடியாது என்பதுடன் சீனா அல்லது அமெரிக்காவின் தலையீட்டை நம்ப முடியாது என்பதை இந்தப் போர் பாகிஸ்தானுக்குக் வெளிப்படுத்தியது.

இதன் விளைவாக, பயங்கரவாதம் மற்றும் ஜிகாதி கொள்கையாகப் பயன்படுத்தி, வழக்கத்திற்கு மாறான வன்முறை வழியை பாகிஸ்தான் கையில் எடுத்தது.  

பாகிஸ்தான் அதை ஒரு வழக்கமான அரச கொள்கையாக மாற்றியுள்ளது. குறிப்பாக 1980 களில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான ஜிஹாத் தனது செயற்பாட்டின் முறையை முழுமையாக்கியது எனவும் குறிப்பிட்டார்.

(இந்துஸ்தான் டைம்ஸ்)