(எம்.மனோசித்ரா)

தேயிலை உற்பத்திக்கு தேவையான இரசாயன உரம் நவம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளது. 

இலங்கையில் சேதன உர உற்பத்தி நாட்டுக்கு தேவையானளவை அண்மிக்கும் வரை தேயிலை தொழிற்துறைக்கு தேவையான நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் சேதன உர உற்பத்தி நாட்டுக்கு தேவையானளவை அண்மிக்கும் வரை தேயிலை தொழிற்துறைக்கு தேவையான நைட்ரஜன் உரத்தினை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த உரத்தொகை நவம்பர் மாத இறுதியில் நாட்டை வந்தடையும்.

நாட்டினதும் நாட்டின் எதிர்காலம் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள பசுமை விவசாயம் குறித்த தீர்மானம் மிகவும் முக்கியத்துவமுடையதாகவும். 

எனினும் அதனை நடைமுறைப்படுத்தும்போது சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, நாட்டில் சேதன உரத்தை உற்பத்தி செய்வதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவோம் என்றார்.