இந்தியாவின் உத்தர பிரதேச அரசு, கலாசார அலுவல்கள் திணைகளத்துடனும், அயோத்யா ஆய்வு நிறுவனத்துடனும் இணைந்து நடாத்தும் தீபோட்சவ விழா எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அயோத்யா நகரில் இடம்பெறவுள்ளது.
இவ்விழாவில் இலங்கையிலிருந்து 'நாட்டிய கலா மந்திர்' நடனக் கலையகம் தயாரித்து வழங்கும் 'ஸ்ரீ ராம ராஜ்யாபிஷேகம்' நாட்டிய நாடகம் மேடையேற்றப்படவுள்ளது.
அயோத்யா ஆய்வு நிறுவனம் நடாத்தும் தீப உற்சவ விழாவில் நாட்டிய கலா மந்திர் வழங்கும் 'ஸ்ரீ ராம ராஜ்யாபிஷேகம்' நாட்டிய நாடகம்
இந்த நாட்டிய நாடகத்தினை இலங்கையின் புகழ்மிகு நடன விற்பின்னர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் தயாரித்து நெறிப்படுத்தி வழங்குகிறார். சிரேஷ்ட ஊடகவியலாளர் செஞ்சொற் செல்வர் ஸ்ரீ விஸ்வநாதன் இதற்கான கதையாக்கத்தை வழங்கியுள்ளார்.
ஸ்ரீ ராம ராஜ்யாபிஷேக நாட்டிய நாடகத்தில் அனுபவம் மிக்க கலைஞரான டி.கே. திருச்செல்வம் அவர்களுடன் நாட்டிய கலா மந்திர் கலை நிறுவனத்தின் சிரேஷ்ட கலைஞரகள் அனுஜா சிவகுமாரன், மிருணாளினி சோமசுந்தர ஐயர், அர்த்தனா கமலநாதன், சுலக்க்ஷிதா திருஞானம், விதுஷாலி கணேஷ், சரண்யா சுதாகரன், தக்ஷனா குமாரரட்ணம், அபிராமி தனபாலசுந்தரம், மற்றும் சுவஸ்திகா சுவீந்திரன் ஆகியோரும் நடனமாடிச் சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கான அழைப்பானது அயோத்தியா ஆய்வு நிறுவன இயக்குனர் கலாநிதி லவ்குஷ் திவேதி, ஸ்ரீ ஜக் மோகன் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி ஸ்ரீ பாலா சங்குராவ்டி வெங்கடேஸ்வர ராவ் ஆகியோரால் ராமாயண உலகக் கலைக் களஞ்சியம் - இலங்கை அத்தியாய மக்கள் தொடர்பு அதிகாரி திரு ஞானகுமார் சிதம்பரம், திருமதி காயத்ரி சுவீந்திரன் அவர்களுக்கும், நாட்டிய கலா மந்திர இயக்குனர் ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM