வீதியில் வைத்து இளைஞரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி - வைரலாகும் காணொளி

By Gayathri

26 Oct, 2021 | 04:21 PM
image

சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக  விஷேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட இருவர், இளைஞர் ஒருவரை சுற்றி இருந்து அவரை தாக்கும் வண்ணமான வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் அதனை மையப்படுத்தியே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் சப்ரகமுவ மாகாண சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்ததாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இரத்னபுரி - கிரி எல்ல வீதியில் இந்த சம்பவம் கடந்த 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.  

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் பயணித்த ஜீப் வண்டியை இரத்தினபுரி - கிரியல்ல வீதியில், பின்னால் வந்த கார் ஒன்று முந்திச் செல்ல முற்பட்டமையால்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

இதன்போது காரில் பயணித்ததாக கூறப்படும் இளைஞனுக்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, பொலிஸ் ஜீப் வண்டியின் பின் பக்கமாக உள்ள பகுதியில் வைத்து கடுமையாக தாக்குவது குறித்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

அபாயகரமாக வாகனம் செலுத்தியதாக குறித்த சாரதியை கழுத்தினால் பிடித்து பொலிஸ் ஜீப் வண்டியை நோக்கி இழுத்து வந்து தாக்குவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான நிலையிலேயே தற்போது குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின், மோசமான நடவடிக்கை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

காணொளிக்கு 

https://twitter.com/virakesari_lk/status/1452924702591176704

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்நாட்டில் பயிற்சிகளைப் பெற்று வெளிநாடு செல்லும்...

2022-11-29 21:43:22
news-image

சுகாதாரத்துறை ஆபத்துக்குள் தள்ளப்படும் நிலை :...

2022-11-29 21:48:08
news-image

பாராளுமன்ற செயற்பாடுகளை புறக்கணிப்போம் - லக்ஷமன்...

2022-11-29 21:56:33
news-image

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சீரழிக்க வேண்டாம்...

2022-11-29 21:58:30
news-image

அதிகாரப் பகிர்வுக்கு ஆளுங்கட்சி இணங்குமா ?...

2022-11-29 16:21:19
news-image

பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த  குற்றச்சாட்டில்...

2022-11-29 22:16:06
news-image

மருந்து உற்பத்தி வழிகாட்டலில் மாற்றத்தை ஏற்படுத்தினால்...

2022-11-29 16:06:19
news-image

 'றோ' தலைவருடனான சந்திப்பு குறித்து பாராளுமன்றத்திற்கு...

2022-11-29 15:32:40
news-image

வைத்தியர்களுக்கு வீசா வழங்க வேண்டாம் -...

2022-11-29 15:20:35
news-image

விமலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி...

2022-11-29 18:58:50
news-image

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் செயற்பாடுகள் இனங்களுக்கிடையில்...

2022-11-29 15:09:49
news-image

பணிப்பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஓய்வுபெற்ற...

2022-11-29 18:59:26