ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக் கூறிக்கொண்டு மூலையில் இருக்கும் நீங்கள் ஒன்று மக்களுடன் இருக்க வேண்டும், அல்லது திருந்த வேண்டும்.  இரண்டுமில்லையேல் வீழ்ந்தாக வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சுயாதீன ஆணைக்குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரேரணைகளை சபையின் அங்கீகாரத்துக்காக சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே பிரதமர் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்,