(எம்.மனோசித்ரா)
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவகாரத்தில் இரு அரசுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் சுமுகமாக பேணும் அதேவேளை, பிரச்சினைக்கான தீர்வைப் பெறுவதிலும் அரசாங்கம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வருகிறது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்தல் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக செயற்பட்டு வருகிறது.
அத்தோடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தி வருகின்றார்.
இலங்கை மற்றும் இந்தியாவிற்குமிடையிலான கடல் எல்லைகள் கற்பனையால் வரையறுக்கப்பட்டதாகவே காணப்படுகிறது.
எனவே தான் சில சந்தர்ப்பங்களில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினை ஆக்கிரமிக்கின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் தீவிர அவதானம் செலுத்தும்.
இதன்போது பாதிக்கப்படும் மீனவர்களுக்கு உதவி வழங்கும் அதேவேளை, இரு அரசுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளையும் சுமூகமாக பேணுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்களை அடிப்படையாகக் கொண்டே அரசாங்கம் செயற்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM