தட்டுப்பாட்டை தவிர்க்க சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் அவசர இறக்குமதி

Published By: Digital Desk 3

26 Oct, 2021 | 03:15 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு எதிர்வரும் எட்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை சிங்கப்பூரிலிந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்தோடு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் தற்போதைய விலை 84 டொலர் ஆகும். எனினும் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் அதன் விலை 45 டொலராகவே காணப்பட்டது.

தற்போது உலக சந்தையில் எரிபொருள் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனவே தான் இந்திய பெற்றோலிய கூட்டுத்தாபனம் (ஐ.ஓ.சி.) எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

எவ்வாறிருப்பினும் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளைக் கருத்திற் கொண்டு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை தீர்மானிக்கவில்லை. குறித்த சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு மக்களுக்கு எரிபொருளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றார்.

எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு :

2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாதகாலத்திற்கான டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 1,137,500 + 10/- 5%  பீப்பாய்கள் மற்றும் டீசல் (உயர்ந்தபட்ச சல்பர் சதவீதம் 0.001) 262,500 10 10/- 5%  பீப்பாய்களை இறக்குமதி மற்றும் 2022.01.01 தொடக்கம் 2022.08.31 வரையான எட்டு மாத காலத்திற்கான பெற்றோல் (92 UNL) 1,341,000 10 10/- 5%  பீப்பாய்கள் மற்றும் பெற்றோல்; (95 UNL 459,000 10 10/- 5%  பீப்பாய்களை இறக்குமதி என்பவற்றுக்கான  நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்ட விலை மனுத்தாரர்களிடம் போட்டி விலை மனு கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கமைய, குறித்த பெறுகையை சிங்கப்பூர்  M/s Vitol Asia Pte. Ltd நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27