(எம்.மனோசித்ரா)

அதானி குழுமத்தின் தலைவர் உள்ளிட்ட குழுவினரது வருகை உத்தியோகபூர்வமானதல்ல. அது தனிப்பட்ட விஜமாகும். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு அதானி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. 

எனவே அவர்கள் அது தொடர்பில் விசாரித்தல் உள்ளிட்ட முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பிலும் அறிந்து கொள்வதற்கு இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.