(எம்.மனோசித்ரா)
நட்பு நாடு என்பதற்காக தரம் குறைவான சீன உரத்தை நாட்டுக்குள் அனுமதிக்க இயலாது என்பதை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக அறிவித்துவிட்டோம். இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.
தரக்குறைவான உரத்தை இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பல்ல என்று அமைச்சவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதன்போது, சீன இரசாயன உர கப்பல் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டபோது இவ்வாறு பதிலளித்த அமைச்சர்,
சீன இரசாயன கப்பல் மீண்டும் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவில்லை.
எவ்வாறிருப்பினும் தரத்தில் குறைவான குறித்த இரசாயன உரத்தைக் கொண்ட கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதைத் தடுக்குமாறு துறைமுக அதிகாரசபையின் தலைவர் நிஹால் கெப்பிட்டிபொல அறிவித்துள்ளார்.
எனவே குறித்த கப்பல் இலங்கை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. இலங்கை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தரத்தில் குறைந்த இந்த உரத்தை கொள்வனவு செய்ய தயாராக இல்லை என்று தெளிவாக அறிவித்துள்ளோம்.
இவ்விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தரக்குறைவான உரத்தை இறக்குமதி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பல்ல. எனவேதான் அவசர கொள்வனவாக திரவ நனோ நைட்ரஜன் உரம் இறக்குமதி செய்யப்பட்டது.
வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையில் இலங்கை ஏனைய அனைத்து நாடுகளுடனும் நட்பு நாடாகவுள்ளது. எதிர்கள் என எவரும் இல்லை. நாம் கூட்டணி நாடும் அல்ல.
வரலாற்று ரீதியில் இலங்கை - சீனா என்பன நட்பு நாடுகளாகும். சீனாவுடன் வலுவான உறவு காணப்படுகிறது. அதற்காக தரக்குறைவான பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது.
அதன் அடிப்படையிலேயே தரக்குறைவான உரத்தினை இறக்குமதி செய்ய முடியாது என்ற எமது நிலைப்பாட்டை சீன அரசாங்கத்திற்கு தெளிவாக அறிவித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM