சீனாவில் இந்த ஆண்டு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட அதிகரிப்பு நிபுணர்களிடையே கவலையை அதிகரித்துள்ளது.

Chickens at a farm in Hefei, in China's Anhui province.

அத்துடன் இவை மனிதர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும் சீன நிபுணர்கள் கூறுகின்றனர்.

2021 ஆம் ஆண்டில் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸாவின் H5N6 துணை வகையுடன் 21 மனித நோய்த்தொற்றுகளை பதிவுசெய்துள்ளதாக சீனா உலக சுகாதார நிறுவனத்திடம் (WHO) தெரிவித்துள்ளது.

2017 இல் H7N9 நோயால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை விட இந்த எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், நோய்த்தொற்றுகள் தீவிரமானவை, பலரை மோசமாக நோய்வாய்ப்படுத்துகின்றன, மேலும் இதனால் குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பெரும்பாலான தொற்றுகள் கோழிப்பண்ணையுடன் தொடர்பு கொண்டவை ஆகும். மேலும் மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் எதுவும் பதிவாகவில்லை என்று WHO கூறுகிறது.