இராணுவப் புரட்சியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சிவில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பிற அரசியல் தலைவர்களை கைது செய்த சூடானிய இராணுவத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா கண்டித்துள்ளது. 

US pauses delivery of $700 million in emergency economic aid to Sudan

இதன் விளைவாக சூடானுக்கு 700 மில்லியன் டொலர் உதவி வழங்குவதை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"சூடான் ராணுவப் படைகளின் நடவடிக்கையை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. சிவிலியன் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களின் கலைப்பை நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம் மற்றும் அவற்றை உடனடியாக மீட்டெடுக்க அழைப்பு விடுக்கிறோம்" என்று கூறினார்.