கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த காலபோகத்தின் போது ஏற்பட்ட பயிரழிவுகளுக்கு இதுவரை இழப்பீடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.
அதற்கான நிதி கிடைக்கும் பட்சத்தில் இழப்பீட்டுக் கொடுப்பனவுகளை வழங்க முடியும் என கமநல மற்றும் கமத்தொழில் காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக 1025 ஏக்கர் நெற்செய்கை 400 ஏக்கர் வரையான வயற் பயிர்கள் 150 ஏக்கர் வரையான பழ பயிர்கள் 82 ஏக்கர் வரையான மரக்கறி செய்கைகள் என்பன அழிவடைந்துள்ளன.
இந்தநிலையில் இவற்றுக்கான இழப்பீட்டுக் கொடுப்பனவுகள் எவையும் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிப்புகளை எதிர்கொண்டவர்கள் தங்களுக்கான இழப்பீட்டை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கடந்த பெரும் போகத்தின்போது ஏற்பட்ட அழிவுகளுக்கான இழப்பீடுகள் நாடளாவிய ரீதியில் இதுவரை வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது.
அதற்கான நிதி கிடைக்கும் சந்தர்ப்பத்தில் மேற்படி இழப்பீடுகளை வழங்க முடியுமென காப்புறுதி சபையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM