நைஜீரியாவில் நடைபெற்ற பேயல்சா சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் (Bayelsa International Film Festival) இலங்கை திரைப்படமான "சுனாமி" இரண்டு விருதுகளை பெற்றுள்ளது.
பேயல்சா சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவில் 86 நாடுகளைச் சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் போட்டியிட்டன.
இந்நிலையில், "சுனாமி" திரைப்படத்தில் கல்யாணி எனும் கதாபாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது நடிகை நிரஞ்சனி சண்முகராஜாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு "சுனாமி" திரைப்படத்தின் சிறந்த இயக்குனருக்கான விருது இயக்குநர் சோமரத்ன திசாநாயக்கவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“சுனாமி” திரைப்படம் இயக்கனர் சோமரத்ன திஸாநாயக்கவின் இயக்கத்தில் ரேணுகா பாலசூரியவின் தயாரிப்பில் உருவாக்கப்பட்டது.
இத்திரைப்படம் இலங்கையில் நடந்த இயற்கை அழிவான சுனாமியின்போது நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் நிரஞ்சனி சண்முகராஜா மற்றும் தர்ஷன் தர்மராஜ் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அத்தோடு சிங்கள திரையுலகின் பிரபலமான நடிகர், நடிகையர்களான பிமல் ஜயகொடி, ஹிமாலி சயுரங்கி ஆகியோரோடு இன்னும் பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM